அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெட்றிக் டொன் நாட்டரிசியை இறக்குமதியின் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.+

Share This