மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

மாத்தளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் அசோக கொட்டச்சி தெரிவாகியுள்ளார்.

சபையின் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இன்மையால், மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

வாக்களிப்பு ஆரம்பமானதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து,அங்கிருந்து வெளியேறினர்.

அதன்பின்னர் உள்ளூராட்சி சபை ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்தினார். இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களை வென்றிருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )