
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரம் ஐ.ம.ச வசமானது
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
CATEGORIES இலங்கை
