மத்திய கிழக்கில் பதற்றம் -அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பதற்றம் -அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது.

மோதல்களின் விளைவாக மத்திய கிழக்கு வழியாக பயணம் தடைபட்டுள்ளதாகவும், வான்வெளி போக்குவரத்தும் அவ்வப்போது மூடப்படுவதாகவும் பாதுகாப்பு எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க பிரஜைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கர்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )