பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீன பிரஜைக்கு ஆயுள் தண்டனை

பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீன பிரஜைக்கு ஆயுள் தண்டனை

பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சீனாவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உயர்கல்வி பயின்று வந்த குறித்த இளைஞன் ஒன்லைன் ஊடாக பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவர்களில் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக லண்டன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், அவர் 10 பெண்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இருப்பினும் இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், இந்த வழக்கு தொடர்பான விபரங்களை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.

10 பெண்களை பாலியல் துஷ்பிரயோக செய்த வழக்கில் குறித்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிகப்பட்டது.இதன்படி அவர் குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்

அத்துடன் 24 பெண்கள் அளித்த வாக்குமூலங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )