மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கி அவரது பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்
இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றாலும், தேசிய பாதுகாப்பை சரியாக மதிப்பிடாமல், ஆழமாக ஆராயாமல், தேசிய பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் பல முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயற்பட்டு வருகிறது. மகிந்த ராஜபக்சவே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததை இந்த அரசாங்கம் மறந்துவிட்டது.

மஹிந்த ராஜபக்சவை பாதுகாப்பது, நாடு என்ற ரீதியில் நாட்டின் பிரதான பொறுப்புஅவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் கடந்த மூன்று மாதங்களாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை .

கடந்த மூன்று மாத கால ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் அரசாங்கம் நம்பிக்கையை உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளாஹஹர்.

 

 

Share This