போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது

போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நேற்றைய தினம் நடத்தப்பட்ட 485 சோதனை நடவடிக்கைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 241 கிராம் ஹெரோயின், 590 கிராம் ஐஸ், 807 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 1324 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாறை பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், ஐஸ் ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒரு பெண் மற்றும் இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )