மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 02.30  முதல் நாளை பிற்பகல் 02.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக
பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன்,
அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை குறித்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This