பொசன் போயா தினத்தை முன்னிட்டு  19,000 இற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 19,000 இற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் வைத்தியர் லட்சுமி சோமதுங்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை தன்சல்கள் வழங்கப்படுகையில் பொது சுகாதார தரநிலைகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து தன்சல் இடங்களிலும் முறையான சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பொசன் போயா தினத்தன்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக உணவு வழங்குவது பாரம்பரியமாகும்.

 

CATEGORIES
TAGS
Share This