நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லையென தீர்ப்பு

நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை மீண்டும் விசாரிக்க வேண்டியதில்லையென தீர்ப்பு

கொழும்பு கோட்டையில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லையென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு கோப்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வழக்கை முன்வைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அனுமதி கோரியது, ஆனால் நீதவான் அத்தகைய விளக்கமளிப்பு தேவையில்லை என கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This