யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி

யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.

மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This