மின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி

மின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி

புத்தளம், மதுரங்குளிய – சீமரகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமரகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் மின் சாதனத்தை நிறுவ முயன்றபோது, சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This