சீரற்ற வானிலையால் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம்

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக சுமார் 2,600 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2,576 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஆறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
எட்டு வணிக வளாகங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேத மதிப்பீட்டு செயன்முறை இடம்பெற்று வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.