லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் ஜூன் மாதம் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
இறுதியாக ஏப்ரல் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும் , 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.