03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது

03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது

கம்பஹா மாவட்டத்தில் 03 கிலோகிராம் 655 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

புஞ்சி நைவலவத்த, எசெல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This