கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர்

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதியமைச்சர் எரங்க குணசேகர நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலும் அவர் இதன்போது ஆராய்ந்தார்.
மீதொட்டமுல்ல, சேதவத்தை, வெஹெரகொடெல்ல, வெல்லம்பிட்டிய, கொதட்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல வீடுகளுக்கு பலத்த காற்றினால் சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளன.
மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் பிரதியமைச்சர் ஆராய்ந்தார்.