மே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டு மே 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்டிற்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா 35.7 வீதம் பங்களித்து முன்னிலை வகிக்கின்றது.

இதற்கமைய இந்தியாவிலிருந்து 42,899 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,382 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 7,965 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஜேர்மன், பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்துள்ளனர்.

கடந்த வருடத்தின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 7.1% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This