
விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலையாகவுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு
இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு தேசபந்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை குழுவின் முன்னிலையில் தேசபந்து கடந்த திங்கட்கிழமை முதன் முறையாகக் முன்னிலையானார்.
இதன்போது தேசபந்து எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
