
கொழும்பு கோட்டை உட்பட அதனை அண்மித்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்லும் நிலையில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
இந்நிலையில் அதனை அண்மித்துள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES இலங்கை
