மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாக அமித் ஷா அறிவிப்பு

மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாக அமித் ஷா அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிரதமர் மோடி அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்கள் 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.

மோடி தலைமையிலான அரசு 1.35 லட்சம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது.

இது மன்மோகன் அரசில் 37 ஆயிரம் கோடி ரூபாவாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்சியை பெற்றுள்ளன” என்றார்.

Share This