போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார மற்றும்
சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
போலந்து வெளியுறவு அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் வருகைத் தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.