பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாவது சிரார்த்த தினம் இன்று

பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாவது சிரார்த்த தினம் இன்று

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

1964 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி இந்தியாவின் புதுக்கோட்டையில் முனாபுத்தூரில்  பிறந்த அவர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தனது 56 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரி மற்றும் இந்தியாவிலுள்ள ஏர்காட்டில் மோர்க்போர்ட் பள்ளியில் கல்வி பயின்று பின்னர் அமெரிக்காவில் பெடிசக் பல்கலைக்கழகத்தில் கோப்றேட் மெனேஜ்மன்ட் என்ற உயர்கல்வியை கற்று இஸ்ரேலில் தொழிற்சங்கம் சார்ந்த கல்வியை நிறைவு செய்தார்.

1990 ஆம் ஆண்டு இலங்கையை வந்தடைந்த பின்னர், தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அரசியலில் தனது பணிகளை முன்னெடுத்தார்.

அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 72 ஆயிரம் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியவர்.

அவர் மலையகத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்துடனும், தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தற்போது வரை அது பேசு பொருளாக மாத்திரமே காணப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This