கிளிநொச்சியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

கிளிநொச்சியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, அரிவியநகர் ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொன்னநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This