அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை

அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை

அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின்(USTR) அழைப்பிற்கிணங்க இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This