
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளரும் இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட சிக்கல்
காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டு, சரியான பதில் கிடைக்காததால் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES இலங்கை
