ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால , தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு
கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அசோக சேபால கூறினார்.
நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்ரை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.