3.54 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3.54 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதான தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் துபாயிலிருந்து சிகரெட்டுகளை கொள்வனவு செய்து கத்தாரில் உள்ள தோஹா வழியாக இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.