இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று திங்கட்கிழமை (19) முதல் ஆரம்பமாகியுள்ளது.
டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் டெங்கு காய்யச்சலால் எழுவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.