உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் ஜெனீவாவில் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் பங்கேற்கிறார்.

“ஒரு ஆரோக்கியமான உலகம்” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளிலினதும் சுகாதார அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், அனைத்து நாடுகளின் சுகாதாரத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000 இற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க,ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This