பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி

பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி

பலத்த மழை காரணமாக பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியான மழை மற்றும் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையே நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறைக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் சுமார் 60 சதவீதம் பங்களிக்கிறது. மேலும் நல்ல சூரிய ஒளி உள்ள காலங்களில் 100,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமாக அறுவடை செய்யப்படுவதாக தனியார் மற்றும் அரசு உப்பு உற்பத்தியாளர்களின் தொடர்புடைய துறைகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான மழை காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, உப்பு இறக்குமதியிலும் தாமதம் ஏற்பட்ட நிலையில் சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறாதொரு நிலையில் நேற்று (17) ஆரம்பமான பலத்த மழை காரணமாக, புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This