ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆபரேசன் சிந்தூர் செயற்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் நேற்று மாலை 05 மணிக்கு அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 08 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டது.

பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் மேற்கொள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்  மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

 

Share This