இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்

இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திலக் சியம்பலாபிட்டிய, கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய குறிப்பிட்ட காலத்திற்கு தலைவராக பணியாற்ற ஒப்புக்கொண்டதாக தெரிவித்த திலக் சியம்பலாபிட்டிய இலங்கை மின்சார சபையில் உள்ள திறமையான நிபுணர்கள் பணியைத் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.