கொழும்பில் மாணவியை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

கொழும்பில் மாணவியை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

அனுமதியின்றி காரில் நுழைந்து எட்டு வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் நேற்று (7) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடந்த இரண்டாம் திகதி கொழும்பு – கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் வைத்து காரில் சட்டவிரோதமாக நுழைந்து எட்டு வயது சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கறுவாத்தோட்டம் பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேக நபர் கொலன்னாவ பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையில், சிறுமியின் தாய் பாடசாலை முடிந்ததும் தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காரில் வந்ததாகவும், மகளை பின் இருக்கையில் அமர வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து காரில் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர், பின் இருக்கையில் இருந்ததனது மகளைத் தள்ளிவிட்டு அச்சுறுத்தியதாக தாய் தனது முறைப்பாட்டி தெரிவித்துள்ளார்.

உடனே, சிறுமியின் தாய் காரில் இருந்து இறங்கி உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This