சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை – நான்கு மாணவர்கள் கைது

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏப்ரல் 29 அன்று, சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயது இரண்டாம் ஆண்டு மாணவர் ஆவார்.
இந்நிலையில், கடந்த முதலாம் திகதி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர், பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறி, சமனல வேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 2) சமனல வேவா பொலிஸ் நிலையம், பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் 20 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இதற்கிடையில், சரித் தில்ஷான் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகிடிவதைக்கு சம்பவம் தொடர்பான விசாரணை, கடந்த மூன்றாம் திகதி பதில் பொலிஸ்மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.