சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்?

சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வருகைத்தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நாட்டிற்குள் வந்ததாக எந்த தகவலும் இல்லையென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கட்டாய பாதுகாப்பு நடைமுறை காரணமாக சிங்கப்பூருக்கு திட்டமிடப்பட்ட UL 308 விமானம் தாமதமானது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், எல்லா நேரங்களிலும் உயர்ந்த தரத்தை பராமரிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.