பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு மோடி அனுமதி

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
அண்மையில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் உள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று புது டில்லியில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கினார்.
இதில் இந்திய இராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயத்தை பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அதாவுல்லாவின் எக்ஸ் தள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடடிக்கைக்கு உறுதியுடனும் தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.