நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் உள்ளதாக இந்திய கடற்படை அறிவிப்பு

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் அண்மையில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

“இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை செய்தித்தொடர்பாளர்
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தப் பின்னணியில்போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This