தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்

தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளை
மேற்கொண்டு அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று பதில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிருக்கு விசாரணைக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கடிதம் ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This