சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும் – பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்

சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்
காஷ்மீர் -பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பேர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் சிந்து நதி தங்களுடையது என்றும் அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன் என்றும்
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“ஒன்று எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின்(இந்தியா) ரத்தம் ஓடும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன் மூலம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது” என்றார்.