53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்திலிருந்து வருகைத் தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை விமான நிலையத்தில் தரையிரறங்கியது.
இதன்போது சோதனை நடவடிக்ககைகளை முன்னெடுத்த போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் 22 வயது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பேங்கொக்கிலிருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.