போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் , நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் , கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Share This