கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் பலி – உலகத் தலைவர்கள் கண்டனம்

கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் பலி – உலகத் தலைவர்கள் கண்டனம்

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

கேஷ்மீரின் அதிக சுற்றுலாபபயணிகள் வருகை தரும், ஹிமாலய பகுதிக்குக்கு அண்மித்த பஹல்கம் பகுதியிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கு 02 நாட்கள் விஜயம் மேற்கொண்ட நிலையில் தற்போது பயணத்தை நிறைவு செய்து
டெல்லிக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் உரிமை கோரப்படும் கேஷ்மீர், டெல்லிக்கு எதிராக பல தசாப்தங்களாக நீடித்த கிளர்ச்சியைக் கண்டுள்ளது, ஆனால் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்கள் அரிதானவை.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் தமது கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.

Share This