வரி விதிப்பு தொடர்பில் விவாதிக்க கூடுகிறது மலேசிய நாடாளுமன்றம்

அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மே மாதம் 05 ஆம் திகதி சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை பிரதமர் அன்வர் இப்ராகிம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கமும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரி விதிப்பு தொடர்பில் மலேசியாவின் நிலை குறித்து விவாதிக்க இந்தச் சிறப்புக் கூட்டம், சிறந்தத் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சின் சியு நாளிதழ், அமெரிக்கா அதன் நட்பு நாடுகள்மீது விதித்துள்ள வரி குறித்து விவாதிக்க மே மாதம் 05 ஆம் திகதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியிட்டிருந்தது.