
உர மானியத்திற்கான நிதி விடுவிப்பு
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 09 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 25,000 ரூபா படி, தலா 2 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.
சிறுபோகத்திற்கான உர மானியத்திற்கு 157 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
