நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் விபத்து – 22 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.