சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஸ்ரீ தலதா வழிபாட்டு புகைப்படம் தொடர்பில் விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ தலதா வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புகைப்படம் எடுக்கப்பட்டதாக அல்லது இது திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்பதைக் கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தங்களது கையடக்க தொலைபேசிகளை செயற்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக
பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.