காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, அந்தப் பகுதி அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஈரான் அணுசக்தி நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் நெதன்யாகு மேலும் கூறினார்.

இதற்கிடையில், பணயக்கைதிகளை திருப்பி அனுப்பத் தவறியதால் நெதன்யாகு கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

பிணைக் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்து மட்டுமல்ல, அவரது சொந்த ஆதரவாளர்களிடமிருந்தும் நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 90 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக அறிவித்தது. நேற்று இரவு, இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

கான் யூனிஸில் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ரஃபாவில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This