டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

நாட்டின் பல பகுதிகளில்பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக
சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா
தெரிவித்துள்ளார்.
பலர் விடுமுறையில் சென்றுள்ளதால், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யாத காரணத்தால்
நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் திறன் இன்மையினாலே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் ஒரே நுளம்புகளால் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகளை பெருக்கத்தைத் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.