ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி

கொழும்பு – கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும், மகனிற்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இரும்பு கம்பியினால் தந்தையின் தலையில் மகன் அடித்துள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 54 வயதுடைய ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயது மகன் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் கிரேன்பாஸ் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.