எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சரும எரிச்சல் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டுமென சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயல்வெளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தசை வீக்கம், வாந்திபேதி உள்ளிட்ட அறிகுறிகளும் எலிக்காய்ச்சலினால் ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் குறித்த நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.